அண்மை நிகழ்வுகள்​

வளமான தமிழகம், வலிமையான பாரதம்

தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)

குறிக்கோள்

தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழக மக்களின் நல் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவது; 

பொதுவாழ்வில் தூய்மை, தனிமனித வாழ்வில் எளிமை, அரசு நிர்வாகத்தில் நேர்மை, கடின உழைப்பு போன்ற மதிப்பீடுகளை பொது வாழ்க்கையில் உருவாக்குவது, வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற லட்சியத்தின் அடிப்படையில் இந்திய மக்களின் முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு, மதசார்பின்மை, இறையாண்மை, ஆகிய கொள்கைகளுக்காக செயல்படுவது; 

பாராளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமதர்ம ஆட்சியை சட்டபூர்வமான முறைகளில் அமைத்து அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் நலிந்தோர் உட்பட அனைவரும் சமம், விஞ்ஞான தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் நவீன செயல்திறன் மிக்க நாட்டினை உருவாக்குவது; 

மனித உரிமைகளை மதிப்பது; 

மனிதநேய அடிப்படையில் உலக நாடுகளுடன் இசைந்து சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைபெறச் செய்வது ஆகியவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்கள் ஆகும்.

நேர்மை - எளிமை -தூய்மை 

தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)

கோட்பாடுகள்

பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் ஜிகே மூப்பனார் அவர்கள் பின்பற்றிய நேர்மை – எளிமை -தூய்மை என்பதின் அடிப்படையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையான 

இந்தியாவை முன்னெடுத்து செல்வதற்கான நல்ல ஆட்சி அமைப்பதும் தான் தமிழ் மாநில காங்கிரஸின் கோட்பாடுகள்.

2014 வரலாறு

கடந்த 2014 லோக்சபா தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்திய போது உறுப்பினர் அட்டையில் பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் படத்தையும் அச்சிட்டு தரப்பட்டதை அகில இந்திய தலைமை, அவர்கள் படங்கள் போடப்பட்ட உறுப்பினர் அட்டைகளை விநியோகம் செய்யக்கூடாது என்று தடை விதித்ததை கண்டித்து லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்து எழுந்தனர் ஆவேசப்பட்டு இனி அகில இந்திய காங்கிரஸ் தேவையில்லை, காமராஜர்; மூப்பனார் பெயரை சொல்லாமல் எப்படி தமிழகத்தில் கட்சியை நடத்த முடியும் தமிழக காங்கிரஸும் அகில இந்திய காங்கிரஸும் இடையே நிரந்தரமான பெரும் இடைவெளி ஏற்பட்டு சோர்வு உண்டாகி மக்களுக்கும் காங்கிரஸ்க்கும் உள்ள தொடர்புகள் அறுந்து காங்கிரஸின் வாக்கு வங்கி பெரும் அளவில் குறைந்து போனது. 

தமிழக காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் அகில இந்திய காங்கிரஸ் மத்திய அரசை மட்டுமே மையப்படுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுத்த தவறான முடிவுகள் தமிழக காங்கிரசை தொடர்ந்து பலவீனப்படுத்தியது. 

தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் தொடங்கி மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் செயல்பட வேண்டும் என எல்லோரும் வேண்டுகோள் வைத்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக் கருதி நாமே தமிழக அளவில் முடிவெடுத்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் வழிகோல, தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் தொடங்கி வளமான தமிழகத்தையும், வளிமையான பாரதத்தையும் படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸை மீட்டெடுத்து தமிழகத்தில் ஒரு அரசியல் இயக்கத்தை ஏன் புதிதாக நடத்த வேண்டும் என்ற வினா தொண்டர்கள் எல்லோர் மனதிலும் எழுந்தது காலத்தின் தேவையும் தமிழ்நாட்டின் எதிர்கால நலன்களும் ஒரு தேசிய பார்வை கொண்ட மாநில கட்சியின் அவசியத்தையும் நமக்கு உணர்த்தியதால் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற உணர்வுகள் பலர் மத்தியில் இருந்தன. 

எனவே லட்சக்கணக்கான தொண்டர்களின் வேண்டுகோளின் படி 03-11-2014 இல் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஐயா ஜிகே வாசன் அவர்கள் தொடங்கினார்.

தொடர்பு

முகவரி

தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
No 4, அசோகா தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600018

தொலைபேசி எண்

044 - 24991901
044 - 24991906

ஃபேக்ஸ்

044 - 24998354

மின்னஞ்சல்

tmcmgkv2014@gmail.com

தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
ஜி. கே. வாசன்
Scroll to Top